முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!

அதிமுக தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை என வேணுகோபால் குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி | வேணுகோபால் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுக முன்னாள் எம்.பி. வேணுகோபால் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

அதிமுகவிலிருந்து தொடர்ந்து இரு முறை (2009, 2014) திருவள்ளூர் தொகுதியில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் வேணுகோபால். இவர், 2017-ல் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுகவின் தற்போதைய தலைமை அனைவரையும் அனுசரித்துச் செல்லவில்லை எனக் குற்றஞ்சாட்டி, கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

Advertisement

Advertisement

அதிமுக தலைமை மீதான அதிருப்தி குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, எம்ஜிஆர், கழகத்தில் இருந்தவர்களையும் எதிரணியில் உள்ளவர்களையும் கழகத்தில் இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தினார். அவரது அரசியல் வாரிசான ஜெயலலிதாவும், எம்ஜிஆர் பாதையிலேயே கழகத்தை வலுப்படுத்த பிரிந்துசென்ற தலைவர்களை எல்லாம் இயக்கத்தில் இணைத்து, கழகத்தை ராணுவக் கட்டுப்பாடோடும் வலிமையோடும் வழிநடத்தினார்.

அத்தகைய மாபெரும் இயக்கமான நம் அதிமுக, இன்று ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக பெற்றோரை இழந்து வாடும் அனாதையான குழந்தை, யாரிடம் செல்வது எனத் தெரியாமல் தத்தளிப்பதுபோல் நம் கழகத்தின் தொண்டர்களின் நிலை உள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் நாடாளுமன்றத்தில், இந்தியாவிலேயே மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக வலிமைபெற்ற அதிமுக, தற்போது சந்தித்து வரும் தொடர் பின்னடைவுகளுக்குப் பின்னால் பல்வேறு அரசியல் மற்றும் சமூகக் காரணிகள் உள்ளன.

கழகம், மீண்டும் பழைய வலிமையைப் பெற வேண்டுமென்றால், அனைத்து கழகத்தினரையும் உள்ளடக்கி ஒரு பொதுவான அரசியல் அணுகுமுறையையும் நம்பிக்கையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார்.

summary

Former MP Venugopal Suddenly Resigns from AIADMK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments