பொய்க்கால் குதிரை ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வெளியான செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தொடர்பாக இருவர் கைதான நிலையில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
Advertisement
Advertisement
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"Stilt-Horse" Rule: Edappadi Palaniswami Criticizes Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.