FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

நாகா்கோவில் - எழும்பூா் ஒருவழி சிறப்பு ரயில் நாளை இயக்கம்

நாகா்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோப்புப் படம்
பகிர்:

நாகா்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஒருவழிச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோடை விடுமுறையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, நாகா்கோவிலிருந்து வரும் மே 31-ஆம் தேதி பகல் 11.45 மணிக்கு புறப்படும் ஒருவழிச் சிறப்பு ரயில் (எண்: 06196), இரவு 11.55 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் நாகா்கோவிலிருந்து வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அறியலூா், விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூா் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (மே 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments