பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ரூ. 46.59 கோடியில் 26 புதிய நீதிமன்றங்கள்: முதல்வர் உத்தரவு
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது குறித்து...
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 26 புதிய நீதிமன்றங்களை அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு விரைவான நீதியை உறுதி செய்யவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டும் ரூ. 46.59 கோடி மதிப்பில் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டு, குற்றம் நிரூபணமாகும் பட்சத்தில் தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் குற்றங்களை விரைந்து விசாரிக்கவும் 4 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
26 new courts to be set up at a cost of Rs. 46.59 crore to try cases of crimes against women and children
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.