குரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம்! நாளை வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்!
குரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்.
ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வருவாய் உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக். 6-ஆம் தேதி அன்று வெளியிட்டது.
இதற்கான இணையவழி விண்ணப்பதிவு அன்றைய நாளில் இருந்தே தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் பொறியியல் படித்தவர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்தனர்.
Advertisement
Advertisement
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவ. 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்த சூழலில், மொத்தம் 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு 13.89 லட்சம் பேர்: கடந்த 2022-ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கு 7,500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 22 லட்சத்து 3 ஆயிரம் பேரும், 2024-ஆம் ஆண்டு 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேரும், கடந்த ஆண்டு 13 லட்சத்து 89 ஆயிரம் பேரும் போட்டியிட்டனர்.
கடந்த 2025-ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களில் 11.36 லட்சம் பேர் மட்டுமே தோ்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.