9 மணிநேரமாக ஒரே இடத்தில் இருந்த அக்வான் புயல்! மீண்டும் நகரத் தொடங்கியது!
வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் குறித்து..
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள அக்வான் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய புயல் சின்னம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
Advertisement
Advertisement
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் அக்வான் புயலாக வலுப்பெற்றது.
இந்தப் புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ.17) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் நவ. 19-ஆம் தேதி காலை அதி தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவ. 20-ஆம் தேதி பிற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் - துனிக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது.
மேலும், புயலின் நகா்வைப் பொருத்து தமிழகத்தில் மழை பாதிப்பு இருக்கும் என்ற்ய் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னைக்கு கிழக்கே சுமார் 610 கி.மீ. தொலைவில் உள்ள அக்வான் புயலானது 9 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்த இருந்த நிலையில், மீண்டும் நகரத் தொடங்கியுள்ளது.
கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.