உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்கள்: முதல்வர் விஜய் வாழ்த்து
உலக மீனவர்கள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தது குறித்து...

உலக மீனவர்கள் நாளில் மீனவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது, "கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
Advertisement
Advertisement
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும்.
மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.