தொகுதி மறுவரையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமி
தொகுதி மறுவரையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது குறித்து...
தொகுதி மறுவரையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (நவ. 29) தெரிவித்தார்.
தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கும் என்று மு. க. ஸ்டாலின் நேற்று (நவ. 28) அறிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் மு.க. ஸ்டாலினை இன்று சந்தித்த்துப் பேசவுள்ளனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
Advertisement
Advertisement
தொகுதி மறுவரையறையை 1971 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அமல்படுத்தினால் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையாது. ஆனால், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எடுத்தால் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும்.
அதனால்தான், திமுக மட்டுமல்லாது நாட்டின் பல கட்சிகள் இதற்கு ஆதரவளிக்கிறது. ஆகையால், அனைத்துக் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுத்தான் ஆக வேண்டும்.
இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது. இது ஒட்டுமொத்த நாட்டின் நலன்கருதி எடுத்துள்ள நிலைப்பாடு. இல்லையென்றால், தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும். அப்போது தமிழ்நாடுக்குத்தான் பாதிப்பு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.