FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய விளையாட்டு: வெண்கலம் வென்ற ஸ்குவாஷ் வீரர்களுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு 30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு.

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் வாழ்த்துத் தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும். அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது வெற்றியைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்கள் திறமை. விடாமுயற்சி மற்றும் குழு உணர்வுடன் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோரது வெற்றி, இளம் தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஈடுபட உத்வேகம் அளிக்கும். இவ்வீரர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று, சர்வதேச அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்!” என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Vijay has announced an incentive of 30 lakh for the players from Tamil Nadu who won the bronze medal in the men's team squash event at the Asian Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments