FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி: நில எடுப்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு வருவாய் அலுவலர் நியமனம்

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளில் சிறப்பு வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டது குறித்து...

சென்னை விமான நிலையம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான நில எடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு வருவாய் அலுவலர் அம்பாயிரநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளில் ஒன்றாக ஐந்தாவது முனையம் (Terminal 5) அமைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கான நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த அம்பாயிரநாதன், சென்னை விமானநிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக நில எடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

சென்னை சர்வதேச விமான நிலையத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும்வகையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.7 கோடி பணிகளாக உள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன் இது ஆண்டுக்கு 3.5 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படவிருக்கும் ஐந்தாவது முனையம் விமான நிலையத்தின் விமானப் பகுதிக்குள் அமையவிருப்பதால், நகரப் பக்கத்திலிருந்து பயணிகள் நுழைவதற்கு வழிவகை செய்யும் வகையில், மாதா பொறியியல் கல்லூரிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 32-லிருந்து ஒரு மேம்பால வழித்தடம் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், திட்டமிடப்பட்டுள்ள மேம்பால இணைப்பு சாலை சுமார் 5.32 கி.மீ. நீளத்துக்கு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Chennai Airport Expansion Project: Special Revenue Officer Appointed to Carry Out Land Acquisition

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments