பழ. நெடுமாறனின் மகன் மாணிக்கம் காலமானார்
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் மறைவு பற்றி...
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் இளைய மகன் மாணிக்கம் நெடுமாறன் (57), இன்று (அக். 1) ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பர்ன் நகரில் காலமானார்.
மெல்பர்ன் நகரில் கடந்த பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த மாணிக்கம் நெடுமாறன், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவித் துறவு பூண்டு புத்த துறவியாக வாழ்ந்துவந்தார்.
கடந்த ஒரு மாதமாக உடல்நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி, இந்திய நேரப்படி இன்று காலை 8.45 மணிக்குக் காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் புத்த மத வழக்கப்படி, மெல்பர்ன் நகரிலேயே நடைபெறும்.
Advertisement
Advertisement
பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதால் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரும் அவருடைய மனைவியும் செல்லவில்லை எனக் குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
Pazha Nedumran son Manikam Nedumaran passed away
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.