FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதிமுக அட்ரஸ் இல்லாத கட்சி... முஸ்தபா விமர்சனம்!

திமுகவினர் ஓடும் காலம் வந்துவிட்டது.. மதுரையில் எம்எல்ஏ முஸ்தபா பேச்சு...

எம்எல்ஏ முஸ்தபா
பகிர்:

அதிமுக எங்கு இருக்கிறது அட்ரஸ் இல்லாத அதிமுகவாக உள்ளதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது,

மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 158வது பிறந்த நாளை முன்னிட்டு மேலமாசி வீதி காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் எம்எல்ஏ முஸ்தபா மற்றும் கல்லானை ஆகியோர் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தீபாவளி கதர் சிறப்பு விற்பனையைத் துவக்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா பேசுகையில்,

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் டிவிடி வேட்பாளர்களுக்கு உள்ளே போட்டி நடக்கிறது குறிப்பாக யார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற போட்டி உள்ளது. கம்யூனிஸ்ட் எவ்வளவு வாக்கு வங்கி வாங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. லஞ்சம் லாவண்யம் இல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். விஜய் கலந்துகொள்ளும் பிரசாரத்தில் மக்கள் சாரை சாரையாகக் கொத்து கொத்தாக வருகிறார்கள்.

மக்கள் மத்தியில் பிரசாரத்திற்கு விஜய் போகும் போது ஆரவாரமாக மக்கள் வருகிறார்கள். இரண்டாவது முறை தேர்தல் வந்ததே இறைவனின் வரப்பிரசாதம் என்று அந்த தொகுதிகளின் மக்கள் சொல்கிறார்கள். அதிமுக தற்போது எங்கு இருக்கிறது அதிமுக என்ற தலைமையே இல்லை அதிமுக ஒன்றும் இல்லாத அட்ரஸ் இல்லாத அதிமுகவாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆக இருந்தபோது நாலரை லட்சம் கோடி கடன் வாங்கினார்.

சசிகலா காலில் விழுந்து ஆட்சி நடத்தினார். 10 தடவை தோல்வி பெற்ற பழனிசாமி கூவத்தூர் பழனிச்சாமி. கும்பாபிஷேகம் டிக்கெட்டுகள் விற்பனை குறித்த கேள்விக்கு, திமுக கவுன்சிலர்கள் சொல்வது பொய்யான குற்றச்சாட்டு அவர்கள் களத்தில் இல்லாதவர்கள். தமிழக வெற்றிக் கழகத்தில் பெருவாரியான தொகுதிகளை மதுரை மக்கள் கொடுத்துள்ளார்கள்.

கும்பாபிஷேக டிக்கெட்டுகளை திமுக தான் விற்பனை செய்திருக்கிறார்கள் விடியோ ஆதாரம் இருக்கிறது என்று திமுக கவுன்சிலர்கள் சொல்கிறார்கள் மானம் ரோசம் வெட்கம் இருந்தால் அந்த விடியோ ஆதாரத்தை வெளியிட வேண்டியதுதானே அரசியல் பூச்சாண்டி காட்டுகிறீர்களா? அரசியல் நாடகம் காட்டுகிறீர்களா? செந்தில் பாலாஜி ஓடுவது போல திமுகவினர் ஓடுவார்கள் நாங்கள் லஞ்சம் லாவண்யம் இல்லாமல் ஆட்சி நடத்தி வருகின்றோம்.

தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக இருந்தார் 75 ஆண்டுக் காலம் திமுக இருந்தது பாலாறும் தேனாறும் ஓடியது என்று சொன்னார்கள். ஒரு லட்சம் கோடி முதலீடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கொண்டு வந்துள்ளார். எதிர்க்கட்சிகள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மகளிர் வெற்றி பயணம் திட்டம் சிறப்பான திட்டம். திமுக தகுதி படைத்தவர்களுக்குத் தான் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னார்கள். எல்லா பெண்களையும் பாதுகாக்கக்கூடிய அரசு எங்கள் அரசு. திமுக போல ஓசி பஸ்ஸில் போகிறீர்கள், வெற்றிப் பயண பேருந்து திட்டம் கொடுத்தால் பெண்களுக்கான உரிமையையும் சலுகையையும் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ளது.

வடக்கு தொகுதி எம்ல்ஏ கல்லணை பேசுகையில்,

மக்கள் ஆணித்தரமாக முடிவெடுத்து முதல்வர் விதியை ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். 100 நாள்களில் 100 ஆண்டுகள் பேசக்கூடிய சரித்திர திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்.

மக்கள் இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பைக் கொடுப்பார்கள் இரண்டு தொகுதிகளுக்கும் பாஸ் மார்க் மக்கள் கொடுப்பார்கள். அரசு மக்களும் ஒன்றுதான் என்பதை எங்கள் மக்கள் ஆட்சி நிரூபித்து இருக்கிறது. அரசு சார்ந்த நிறுவனங்களில் இந்த தீபாவளிக்குப் பொதுமக்கள் பொருள்களை வாங்க வேண்டும்.

முன்பு எல்லாம் விஜய் மக்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது மக்களை அவர் சந்திக்கிறார். மக்களைச் சந்திப்பது முதலமைச்சர் விஜய்க்கு மிகவும் பிடிக்கும். இவ்வாறு பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments