FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொத்து பரோட்டா போட்டவருக்கா இந்த நிலை? கட்சி மாறும் கலாசாரத்துக்கு முடிவுரை! சொன்னது யார்?

கொத்து பரோட்டா போட்டவருக்கா இந்த நிலை? கட்சி மாறும் கலாசாரத்துக்கு முடிவுரை எழுதப்படும் என ஆர்.பி. உதயகுமார் பேசியது பற்றி...

முதல்வர் விஜய் - file photo
பகிர்:

இனி கட்சி மாறுகின்ற கலாசாரத்திற்கு தமிழகத்தில் முடிவுரை எழுதுகிற வரலாற்று தீர்ப்பாக தாராபுரம் மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்குவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் 5 நிமிட பிரசாரத்தில் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்து கொத்து புரோட்டா போட்டோம் என வீராப்பாய் பேசிய விஜய், மதுராந்தகத்தில் 39 இடங்களில், 5 மணி நேரம், 10 பொறுப்பு அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி அனைத்தும், முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பதையே காண்பிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.

Advertisement

Advertisement

அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரசாரத்தின் மத்தியில், மதுராந்தகத்தில் இன்றைக்கு 39 இடங்களில், 5 மணி நேரம் 10 பொறுப்பு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி முதல்வர் விஜய் மீது, மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை கடந்த நான்கு மாத கால ஆட்சியில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என்பதையே காட்டுகிறது.

தவெக ஆட்சியின் செயல்பாடுகள், முதல்வர் அணுகுமுறைகள், விஜயின் வசீகரம் என அனைத்தும் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக தற்போது இந்த பிரச்சாரம் நமக்கு எடுத்துக்காட்டி வருகிறது.

இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெக வீழ்ச்சி அடைந்து விடுமோ என்ற தோல்வி பயத்தில், தொகுதிக்கு இரண்டு நாள் தேர்தல் பிரசாரம் சுற்றுப்பயணம் அதிலும் தேர்தலில் விதிமுறைகளை மீறி கோடிக் கணக்கான ரூபாய் செலவு செய்து பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள், சாலைவலம் நடத்தியும் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு வரைமுறையை தாண்டி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தேர்தல் பிரசாரத்தை இரண்டு தொகுதிகளும் முதல்வர் விஜய் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு, ஒட்டுமொத்த அமைச்சரவையையும், தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருவது கட்டாயம் தவெகவிற்கும், முதல்வர் விஜய்க்கும் ஏன் வந்தது? இதுதான் ஜனநாயகத்தினுடைய வலிமை.

வாழ்க்கை ஒரு வட்டம் என்று முதல்வர் விஜய் சொல்வார். மேலே இருப்பவர் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே வருவதும் இதுதான் இயற்கை நியதி.

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து செப்டம்பர் 25ஆம் தேதி முதல்வர் விஜய் முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியில் வாகனத்தில் இருந்தபடியே 39 இடங்களில் பிரசாரம் செய்கிறார். இதற்கு ஒட்டுமொத்த தவெக பொறுப்பாளர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முதல்வர் விஜய் ஜனநாயகத்தின் மீது கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து தேர்தலில் விஜய் பிரசாரத்திற்கு செல்லாமல் 34.99 வாக்குகளைப் பெற்று தவெக ஆட்சி அமைத்தது.

அதிலும் கொளத்தூர் தொகுதியில் 5 நிமிட பிரசாரத்தில் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்து கொத்து புரோட்டா போட்டோம் என சட்டப்பேரவையில் வீராப்பு பேசிய விஜய் இன்றைக்கு முதல்வரான பிறகு, அடுத்த கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அதற்காக குதிரை பேரத்தை நடத்தி, பதவி ஆசை காட்டி அவர் அரங்கேற்றி வருகின்ற ஜனநாயக படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் இந்த இரண்டு தொகுதிகளில் மக்கள் தீர்ப்பளிக்க உள்ளார்கள்.

இரட்டை இலை மீண்டும் மலர இருக்கிறது, ஆகவே குதிரை பேரம் நடத்தி பதவி ஆசை காட்டி அவர் தொடர்ந்து அரங்கேற்றி வருகிற ஜனநாயகப் படுகொலை திசை திருப்பவே இன்றைக்கு அவர் பல்வேறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வருகிறார். பஞ்ச் டயலாக் பேசியுள்ளார், அழுகை நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.

கடந்த நான்கு மாத காலம் தவெக ஆட்சியில் மின்சார வெட்டு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, கொலை - கொள்ளை, லாக்கப் மரணங்கள், பெண்கள் பாதுகாப்புக்கு கேள்விகுறி, விலைவாசி உயர்வு, அதிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இவை எல்லாம் விஜய்யின் ஆளுமையின் கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக விஜய்யின் வசிகரம் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது தவெக தோல்வி முகத்தில் உள்ளது‌.

இந்த தாராபுரம், மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்கும் தீர்ப்புதான் இனி கட்சி மாறுகின்ற கலாசாரத்திற்கு தமிழகத்தில் முடிவுரை எழுதுகிற வரலாற்று தீர்ப்பாக இருக்கும், அப்படி ஒரு தீர்ப்பை தாராபுரம், மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்குவார்கள். அப்போதுதான் ஜனநாயகத்தின் மீது வலிமையும், மக்கள் மீது ஜனநாயக கட்சிகள் வைத்திருக்கிற நம்பிக்கையும் உறுதி செய்யப்படும் என விஜய் புரிந்து கொள்வார்.

வசீகரத்தால் எதை வேண்டுமானாலும் வளைத்து விடலாம் என நினைக்கும் விஜய்க்கு இந்த இரண்டு தொகுதியில் ஏமாற்றம் தான் கிடைக்கும். எடப்பாடியாரின் கருத்தை வலுப்படுத்த மீண்டும் இந்த இரண்டு தொகுதியில் மீண்டும் இரட்டை இலை தான் மலரும் என கூறினார் ஆர்.பி. உதயகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments