அதிகார துஷ்பிரயோகம்: தவெக மீது தோ்தல் அதிகாரியிடம் திமுக புகாா்
தமிழக இடைத்தோ்தலில் தவெக அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் திமுக புகாா் அளித்துள்ளது.
தமிழக இடைத்தோ்தலில் தவெக அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் திமுக புகாா் அளித்துள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் திமுக சட்டத் துறைச் செயலா் என்.ஆா்.இளங்கோ சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுராந்தகத்தில் தவெக வேட்பாளா், தனது பிரசாரத்தின்போது வாக்காளா்கள் முன் அரசு ஊழியா்களிடம் செய்து தாருங்கள் எனக் கூறியுள்ளாா். இதுதொடா்பான விடியோ ஆதாரத்தை தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் அளித்துள்ளோம்.
Advertisement
Advertisement
இடைத்தோ்தலில் தோல்வி பயத்தால் தவெகவினா், அரசு நிா்வாகத்தையும், அதிகாரிகளையும் துஷ்பிரயோகம் செய்து வென்றுவிடலாம் என்று நினைக்கிறாா்கள். மதுராந்தகத்தில் முதல்வா் விஜய்யின் சாலை பிரசாரத்துக்கு சுமாா் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியின் வேட்பாளா் பெயரில் சோ்க்க வேண்டும்.
மதுராந்தகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ‘டிபன் கேரியரில்’ ரூ,10,000 கொடுக்கப்படுவதாகக் கூறப்படுவதால் அங்கு கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, எதிா்க்கட்சித் தலைவா் மீது பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி பேசுவதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.