FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைத்தேர்தலில் முதல்வருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது: நயினார் நாகேந்திரன்

இடைத்தேர்தல் நெல்லையில் அளித்த பேட்டியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது பற்றி...

நயினார் நாகேந்திரன்.
பகிர்:

இடைத்தேர்தலில் முதல்வருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக மிகவும் பின்தங்கியுள்ளது. முதல்வருக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. முதல்வருக்குச் சட்டப்பேரவையிலும் பேசத் தெரியவில்லை, பிரசாரத்திலும் பேசத் தெரியவில்லை; பிரசாரத்தில் மாற்றி மாற்றி பேசி வருகிறார். தவெகவை திமுக என்கிறார், பாஜகவை திமுக என்கிறார்; என்ன சொல்லப் போகிறார் என்றே தெரியவில்லை. 'இந்தியா' கூட்டணியில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தன, இப்போது திமுக அதில் இல்லை.

தவெக எவ்வளவு நாள் இந்தக் கூட்டணியில் இருக்கப் போகிறது என்பதும் தெரியவில்லை. உருவக் கேலி செய்து ஒருவரைப் பேசுவது மிகவும் தவறு. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் எவ்வாறு பேசினார் என்பது தெரியவில்லை. அவர் ஒருவரை உருவக் கேலி செய்யும் நோக்கத்தில் பேசினால் அது தவறு. காங்கிரஸ் தோல்வி அடைந்தால் வாக்கு இயந்திரம் குறித்து ஒரு செய்தியும், வெற்றி பெற்றால் ஒரு செய்தியும் சொல்வது மிகவும் தவறு. எஸ்.ஐ.ஆர். நீக்கம் கொளத்தூர் தொகுதியில் நடந்தபோது திமுக எந்தக் குறையும் சொல்லவில்லை.

Advertisement

Advertisement

ராகுல் காந்தி பொய்யாகவே எல்லாவற்றையும் சொல்லி வருகிறார். எஸ்.ஐ.ஆர். வரப்போய்தான் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அறநிலையத்துறை கோயில்களை ஆகமக் கோயில், ஆகமமில்லாத கோயில் எனப் பிரித்து, பிரிவினையை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முயற்சி மேற்கொள்கிறது. அனைத்துக் கோயில்களும் ஒரு வகையான ஆகமத்தைப் பின்பற்றிதான் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்ஸ்டாகிராமில் பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தவெக ஆட்சி அமைத்தது. அதனை இப்போதும் மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் தவெகவினர் பொய்யாகச் சொல்லி வருகின்றனர்.

சமூக வலைதளங்களைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் மிகப்பெரிய பிரச்னைகள் வரும். தண்ணீருக்காகத்தான் உலகப்போர் வரும் என்று சொல்வார்கள். ஆனால், சமூக வலைதளங்களைக் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்னை வரும். சின்னக் குழந்தைகள் எல்லாம் சமூக வலைதளத்தில் தவெக பயன்படுத்தியது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய அரசு எடுத்த நிலைப்பாடு காரணமாகத்தான் ஆட்சியை இழந்தார்கள்.

தமிழக வெற்றிக் கழக அரசும் அதே நிலைப்பாடு எடுத்தால், ஐந்தாண்டு ஆட்சியில் நீடிக்குமா என்பது வாய்ப்பில்லை ராஜா என்பது போல் உள்ளது," எனத் தெரிவித்தார்.

summary

BJP State President Nainar Nagenthiran has stated that the Chief Minister has developed a fear of defeat in the by-election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments