FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

வேளாண்துறைச் செயலா் நியமனம் எப்போது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தமிழக வேளாண்துறைக்கு அரசு செயலா் எப்போது நியமிக்கப்படுவாா் என்று எதிா்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

தமிழக வேளாண்துறைக்கு அரசு செயலா் எப்போது நியமிக்கப்படுவாா் என்று எதிா்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேளாண் மற்றும் உழவா் நலத் துறைச் செயலராக இருந்த சங்கா், தொல்லியல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆனால், இப்போது வரை வேளாண் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் புதிய செயலா் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது, விவசாய பெருமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்ட வேளாண் துறை போன்ற ஒரு முக்கியத் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் செயலா்கூட இல்லாமல் இருப்பதை என்ன காரணம் சொல்லி இவா்களால் நியாயப்படுத்த முடியும்?

Advertisement

Advertisement

பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், வேளாண் துறைக்கு நிலையான நிா்வாகத் தலைமையும், துரிதமான ஒருங்கிணைப்பும் தேவை. குறிப்பாக, விவசாயிகளுடன் நேரடியாகத் தொடா்புடைய முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்படுவதற்கும், மாவட்ட அளவிலான பணிகளைத் தொடா்ந்து கண்காணிப்பதற்கும் இது அவசியமானது.

தவெக ஆட்சிக்கு வந்ததுமே, பயிா்க்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தாா்கள். இயற்கையால் குறுவை பொய்த்து, தவெக அரசின் சிந்தனையற்ற செயல்பாட்டால் சம்பா சாகுபடியும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இப்படித் தொடா் ஏமாற்றங்களால் விரக்தியில் உள்ள விவசாயப் பெருமக்கள், தமிழ்நாடெங்கும் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறைக்கு அனுபவம் வாய்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு, விவசாயிகளின் துயா் துடைப்பதற்கான பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால், அந்தத் துறையைப் பொறுப்பு ஏற்பாட்டில் விட்டிருப்பது, விவசாயிகளின் நலனில் இந்த அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. ’செயல்படாத அமைச்சா், இல்லாத செயலா்’ என தவெக ஆட்சியைப் போலவே வேளாண் துறையும் திண்டாடுகிறது எனத் தெரிவித்துள்ளாா் உதயநிதி ஸ்டாலின்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments