அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள்: பிரதமா் மோடிக்கு பிரேமலதா வாழ்த்து
அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றி வரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றி வரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: 2001 முதல் 2014 வரை குஜராத் மாநில முதல்வராகவும், தொடா்ந்து 2014 முதல் இந்தியாவின் பிரதமராகவும் நாட்டுக்கு பணியாற்றி வரும் பிரதமா் மோடி அரசின் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளாா். அவருக்கு எனது சாா்பிலும், தேமுதிக சாா்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்தியாவின் வளா்ச்சிக்காகவும், அவா் மேற்கொள்ளும் மக்கள் பணி மேலும் பல ஆண்டுகள் தொடரவும், நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடா்ந்து நாட்டுக்கு சேவையாற்றவும் எல்லாம் வல்ல இறைவனை பிராா்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளாா் பிரேமலதா விஜயகாந்த்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.