பெசன்ட் நகரில் அமைதியாக போராடியவர்கள் கைது! உதயநிதி கண்டனம்
பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது குறித்து...
பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த சோஃபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த ஃப்டம்மி முதல்வர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.
சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், தில்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதல்வர் நிரூபித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது” என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
Leader of the Opposition Udhayanidhi Stalin has condemned the arrest of youths who were protesting peacefully in Besant Nagar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.