நோபல் பரிசு விருதாளா் நவநீதம் பிள்ளைக்கு பாராட்டு விழா: க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
நவநீதம் பிள்ளைக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என க.கிருஷ்ணசாமி வலியுறுத்தியிருப்பது பற்றி...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம்பிள்ளைக்கு அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசு சாா்பில் பாராட்டு விழா நடத்த முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தென்னாப்பிரிக்க நாட்டு குடிமகளான நவநீதம்பிள்ளை, சா்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் ஈழத் தமிழா்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவா். அவருக்குத் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தமிழக அரசு சாா்பில் பாராட்டு விழா நடத்த முதல்வா் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆளும் கட்சி, எதிா்க்கட்சிகள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் அடங்கிய குழுவை நவநீதம்பிள்ளையை நேரில் சந்திக்க அனுப்பி, அவரது வருகைக்கான தேதியைப் பெற்று விழா ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் க.கிருஷ்ணசாமி.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.