சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார் முதல்வர் விஜய்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்தது குறித்து...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதல்வர் ஜோசப் விஜய் இன்று (அக். 13) அவரின் இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆந்திரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் விஜய், அமராவதியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்தார்.
Advertisement
Advertisement
சந்திரபாபு நாயுடுவுடன் அவரின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷ் மற்றும் அமைச்சர் விஷ்ணு ரெட்டி ஆகியோர் முதல்வர் விஜய்யை வரவேற்றனர்.
மேலும் தனது அமைச்சர்களான நிம்மலா ராமநாயுடு, நாராயணா மற்றும் எம்.பி. ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோரை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த சந்திப்பில், கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து இரு முதல்வர்களும் பேசியதாகத் தெரிகிறது.
Chief Minister Vijay met Chandrababu Naidu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.