முதல்வர் விஜய் செல்லும் கனக துர்கையம்மன் கோயிலின் சிறப்பு என்ன?
கனக துர்கையம்மன் கோயிலின் சிறப்பு குறித்து...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைப் பெற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று(அக். 13) ஆந்திர மாநிலத்துக்குச் செல்கிறார். இதனைத் தொடர்ந்து கனக துர்கை அம்மன் கோயிலுக்குச் செல்கிறார்.
தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரில் அமைந்துள்ள கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர் குறித்தும், கோதாவரி - கிருஷ்ணா- காவிரி ஆகிய தென் மாநில நதிகளை இணைக்கும் திட்டம் குறித்தும் முதல்வர் விஜய் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் விஜய் செல்கிறார். மாலை 4 மணியளவில் விஜயவாடா சென்றடையும் முதல்வர், அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்கு சாலை வழியாக சென்று வழிபடுகிறார்.
Advertisement
Advertisement
இந்தப் பயணத்தின்போது, அந்த மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணையும் முதல்வர் விஜய் சந்திக்க உள்ளார். தசரா பண்டிகையையொட்டி, விஜயவாடாவில் நடைபெறும் கலாசார திருவிழாவில் பவன் கல்யாணுடன் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார்.
கனக துர்கையம்மன் கோயிலின் சிறப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நிதிக் கரையில் இந்திரகீலர்தியில் அமைந்துள்ள கனக துர்கை அம்மன் கோயில் சுயம்புவாக தோன்றிய சக்தி தலமாகும். கனக துர்கையம்மன் சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
கனக துர்கையம்மன் கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆதி சங்கரர் இங்கு ஸ்ரீசக்கரத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்தக் கோயிலில் 10 நாள்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிருஷ்ண நதியில் நீராடி அம்மனை வழிபடுவார்கள். இங்கு சாகம்பரி திருவிழா, வளையல் திருவிழா, பவானி தீக்ஷா உள்ளிட்ட விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Tamil Nadu Chief Minister Joseph Vijay is visiting Andhra Pradesh today (Oct. 13) to meet Andhra Chief Minister Chandrababu Naidu and secure Krishna river water for Chennai. Following this, he will visit the Kanaka Durga Temple.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.