வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை!
வெளியானது 10, 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை
தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது. மார்ச் 3-ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்குகிறது.
11ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதே வேளையில், 11ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 2027ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17ஆம் தேதி 10ம் வகுப்புப் பொதுத் தேர்வும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 11 (தோல்வியடைந்தவர்களுக்கு), 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை அரசு தேர்வுகள் இயக்கக கூட்ட அரங்கில் இன்று வெளியிட்டார்.
Advertisement
Advertisement
மார்ச் மாதம் பொதுத் தேர்வுகள் தொடங்கவிருக்கும் நிலையில், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகும் வகையில், தேர்வு அட்டவணை ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை
மார்ச் 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
பிப். 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
11, 12ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன.
தமிழ் - 03.03.2027
ஆங்கிலம் - 09.03.2027
வேதியியல் - 12.03.2027
உயிரியல் - 19.03.2027
இயற்பியல் - 23.03.2027
கணிதம் - 29.03.2027
கணக்குப் பதிவியல் - 12.03.2027
கணினி அறிவியல் -15.03.2027
வரலாறு - 19.03.2027
பொருளியல் - 23.03.2027
விலங்கியல் - 29.03.2027
புவியியல் - 12.03.2027
கணினி பயன்பாடு - 15.03.2027
உயிர் வேதியியல் - 15.03.2027
அரசியல் அறிவியல் - 15.03.2027
புள்ளியியல் - 15.03.2027
வணிக கணிதம் - 19.03.2027
வணிகவியல் - 29.03.2027
நுண்ணுயிரியல் - 29.03.2027
ஊட்டச்சத்து, உணவுமுறை - 29.03.2027
வேளாண் அறிவியல் - 29.03.2027
நர்சிங் (பொது) - 29.03.2027
உணவு சேவை மேலாண்மை - 29.03.2027
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு
மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
மே 20ஆம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.
தமிழ் பாடம் - 17.03.2027
ஆங்கில பாடம் - 25.03.2027
கணிதம் - 31.03.2027
அறிவியல் - 05.04.2027
சமூக அறிவியல் - 09.04.2027
விருப்பமொழி - 12.04.2027
பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.