தண்ணீரை வீணாக்காதீர்... திடீரென விஜய் தேவரகொண்டா சொல்லக் காரணம்?
தண்ணீரை வீணாக்காதீர் என நடிகர் விஜய் தேவரகொண்டா சொல்லக் காரணம்?
தண்ணீரை கவனமாக பயன்படுத்துங்கள், வீணாக்காதீர்கள் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா வலியுறுத்தியிருப்பது வைரலாகியிருக்கிறது.
நடிகர் விஜய் தேவரகொண்டா, திடீரென தண்ணீரைப் பற்றி பேசியிருப்பது ஏன் என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் வைரலாக, அதற்கும் அவரே பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், எல் நினோ தாக்கம் காரணமாக, மழைப் பொழிவு குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் அடுத்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும். எனவே, மக்களே கவனமாக இருங்கள். தண்ணீரை குறைவாக பயன்படுத்துங்கள். வீணாக்காதீர்கள். மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
Advertisement
Advertisement
உணவுகளை சமைக்கும்போதும் கவனமாக, சரியான அளவில் சமைத்து வீணாக்காமல் இருங்கள். ஏனென்றால் ஒரு வருடத்துக்கு எல்நினோ காரணமாக உணவுப் பொருள் தட்டுப்பாடு வரலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.
இத்தனை காலம் சமூக செயற்பாட்டாளர்களும், வானிலை நிபுணர்களும் எல் நினோ தாக்கம் குறித்து பேசிவந்த நிலையில், நடிகர் ஒருவர் முதல் முறையாக இன்று எல்நினோ பற்றி பேசியிருப்பது கவனம் பெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.