எ.வ. வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை! உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்!
திமுக மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மணல் எடுத்த வழக்கில், உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்...
திமுக மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மணல் எடுத்த வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து சட்டவிரோதமாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு,10 முதல் 23 அடி ஆழத்திற்கு மண் எடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அரசுக்கு 8 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, அவரது மகன் எ.வ. குமரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் இருவர் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement
இந்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில், எ.வ. வேலுவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படவில்லை என்றும், லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து எ.வ. குமரன் தாக்கல் செய்த மனுவுக்கு, பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதி, எ.வ. வேலு தாக்கல் செய்த மனுவை முடித்துவைத்தும், எ.வ. குமரன் மீதான மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
No lookout notice issued against E.V. Velu! Police clarify in High Court.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.