திமுக எம்எல்ஏ எ.வ. வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!
எ.வ. வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...
திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ. வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, 2,455 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ. வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி, தேர்தல் வழக்கை விசாரிப்பதற்கு எந்த காரணமும் இல்லை எனக்கூறி, தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகத்தின் தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை தவெக எம்எல்ஏ இளையராஜா, பெருந்துறை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜிநாமா செய்த ஜெயக்குமார், கோபிசெட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன், கோவை தெற்கு திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி ஆகியோருக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Election case against E.V. Velu dismissed by Madras HC
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.