அரசு நிகழ்ச்சியில் மின்சாரம் துண்டிப்பு! காரணமனவர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் பேச்சு!
அரசு நிகழ்ச்சியில் திடீர் மின்தடை பற்றி அமைச்சர் கூறுவது..
அரசு விழாக்களின்போது தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதுபோல நடவடிக்கைகளுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் பா. ராஜ்குமார் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் புதன்கிழமை பங்கேற்றார்.
இந்த நிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் முடிவுற்ற ரூ. 10.04 கோடி மதிப்பிலான 17 பணிகளைத் தொடக்கி வைத்துவிட்டு, அமைச்சர் ப. ராஜ்குமார் உரையாற்றினார்.
Advertisement
Advertisement
அப்பொழுது அமைச்சர் ராஜ்குமார் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒலி பெருக்கியில்லாமல் சற்று நேரம் பேசிய அமைச்சர் ராஜ்குமார், மின்சாரம் வந்ததும், இதுகுறித்து குறிப்பிடுகையில், அரசு நிகழ்ச்சிகளில் இதுபோன்ற அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதை யார் செய்கிறார்கள் என விரைவில் அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என்றார். தொடர்ந்து அமைச்சர்கள் நிகழ்ச்சி, தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகவே இருந்து வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.