FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முன்னோட்டம்தான்! இரவு, அதிகாலையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்!

இரவு, அதிகாலையில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என கணிப்பு.

14 அக்டோபர் 2026, 3:06 pm IST
மழை - கோப்புப்படம்
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென மழை பெய்யத் தொடங்கியுள்ளது. பருவமழைத் தொடங்கியுள்ள நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தீவிரமடையவுள்ளது.

இது தொடர்பாக, வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களை பதிவிடும் தனியார் வானிலை ஆய்வாளரும் எல்-நினோ வல்லுநர் குழு உறுப்பினருமான பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

”சென்னையிலிருந்து தூத்துக்குடி வரை மேகக் கூட்டங்கள் காணப்படுகின்றன

Advertisement

Advertisement

திடீர் மழை; பின்னர் பிரகாசமான சூரிய வெளிச்சம்; மீண்டும் திடீர் மழை என மாறி மாறி சூழல் அமையும்.

அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருக்கலாம். இது வடகிழக்குப் பருவமழையின் இயல்பான தன்மையாகும்.

இந்த மழை கடலோர மாவட்டங்களில் மட்டும் பெய்யபோவதில்லை, தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழைப் பொழியும். குடைகளைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள், பருவமழை தற்போதுதான் தொடங்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

After a period of intense heat in Chennai and its suburbs, rain has suddenly begun to fall. With the onset of the monsoon, the rainfall is expected to intensify during the night and early morning hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments