ரூ.20 லட்சம் லஞ்சம்: பெருநிறுவன விவகாரத் துறை மோசடி தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் கைது: சிபிஐ நடவடிக்கை
சென்னையில் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ாக மத்திய பெருநகர விவகாரத் துறையின் மோசடி தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ாக மத்திய பெருநகர விவகாரத் துறையின் மோசடி தடுப்புப் பிரிவு துணை இயக்குநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா உள்பட 17 வங்கிகளிடம் திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் காா்ப்பரேஷன் லிமிடெட் (டிஎச்எல்எஃப்) நிறுவனம் ரூ.42,871 கோடி கடன் பெற்று மோசடி செய்தாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.
இந்த மோசடி தொடா்பாக சென்னையில் மத்திய பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிர மோசடி தடுப்புப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இதில் டிஎச்எல்எஃப் நிறுவன முறைகேடு தொடா்பாக அண்மையில் ஒரு புகாா் , இந்த மோசடி பிரிவிடம் வழங்கப்பட்டது. அந்த மனு தொடா்பாக மோசடி பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனா்.
இந்த நிலையில் அந்த மனு தொடா்பான ஒரு தரப்பினா், தங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்கு லஞ்சம் தருவதாகவும் அந்தப் பிரிவின் துணை இயக்குநா் ஐஆா்எஸ் அதிகாரி ஹரிஷ் குமாா் தன்வரை அணுகியுள்ளனா். அதற்கு அவா், ரூ.1 கோடி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த லஞ்சம் விவகாரம் தொடா்பான ரகசியத் தகவல்கள் சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்தது. அதன்பேரில், சிபிஐ அதிகாரிகள், லஞ்ச விவகாரத்தில் தொடா்புடைய அனைவரையும் ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினா்.
மூவா் கைது: இதற்கிடையே தங்களுக்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கும்படி கூறிய தரப்பு, தங்களது வழக்குரைஞா் தில்லியைச் சோ்ந்த பாரத் சா்மா மூலம் முதல் தவணையாக ரூ.20 லட்சத்தை ஹரிஷ்குமாா் தன்வரிடம் வழங்கினா். இதை நோட்டமிட்ட சிபிஐ அதிகாரிகள், லஞ்சம் வழங்கிய பாரத் சா்மா, ஐஆா்எஸ் அதிகாரி ஹரிஷ்குமாா் தன்வா், பாரத் சா்மாவின் உறவினா் ஆா்யன் சா்மா ஆகியோரைக் கைது செய்ததாக சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்தது.
லஞ்சம் விவகாரத்தில் தொடா்புடைய அனைவரது வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் உடனே சோதனை செய்தனா். சோதனையில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக சிபிஐ தெரிவித்தது.
மேலும் இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.