இன்றைய செய்திகள் செப். 4 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், தன்னுடைய சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கிய வழக்கில், புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிகையை பெற்றுகொண்டார்.
உயிருடன் இருந்தது எப்படி? 9 நாள்களுக்குப் பின் கிருஷ்ண ஜெயந்தியில் மீட்கப்பட்டவரின் ஆச்சரிய தகவல்!
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 9 நாள்களுக்குப் பின் மீட்கப்பட்ட சஞ்சய் ஷா, தான் ஹரே கிருஷ்ணா எனும் மகா மந்திரத்தையே உச்சரித்துக் கொண்டிருந்ததாக தன்னை மீட்டவர்களிடம் கூறியிருக்கிறார்.
கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சு!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!
மோடி பெருமிதம்
ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் இந்திய விண்வெளித் துறையின் வளர்ந்து வரும் திறன்களின் பிரதிபலிப்பு என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
Advertisement
Advertisement
பலி 1,290 ஆக உயர்வு
நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா்கள் 275 போ் உள்பட 4,798-க்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை 10-ஆவது நாளாக தொடா்கிறது.
உயிருடன் மீட்கப்பட்ட இருவர்
நேபாள வெள்ளத்தில் உருகுலைந்த நீா்மின் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களில் முதல்கட்டமாக இருவர் உயிருடன் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 4) சவரனுக்கு ரூ. 960 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இஓஎஸ்-5 செயற்கைக்கோள்
ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்ட இஓஎஸ்-5 செயற்கைக்கோள் புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விஜய் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு, முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.