FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இன்றைய செய்திகள் செப். 5 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

5 செப்டம்பர் 2026, 10:08 pm IST
ஆசிரியர் நாள் - ஐஏஎன்எஸ்
பகிர்:

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி!

காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் நிகழ்ந்த தீவிபத்தில் 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல்

கேரளத்தில் நிகழ்ந்த விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 8 மாணவர்கள் பலியான நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கர்நாடகம்: போலீஸாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் பதுங்கிய குற்றவாளி!

கர்நாடகத்தில் குளத்தில் பதுங்கிய குற்றப் பின்னணி கொண்ட இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

Advertisement

Advertisement

அடுத்த 2 மணிநேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்துக்கு(இரவு 10 மணி வரை) 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது.

விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து!

கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வின்போது விமானப்படையின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, 8 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை!

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10 நாள்கள் இடிபாடுகளுக்குள்...!

நேபாள பெருவெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் மீட்கப்பட்டது தொடர்பாக...

வேலை இல்லை, உதவுங்கள்! சின்ன திரை வாய்ப்பை மீண்டும் பெற்றது பற்றி ஸ்மிருதி இராணி பேச்சு!!

2024 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, தனக்கு வேலை இல்லை, உதவுங்கள் என்று கேட்டு மீண்டும் சின்ன திரை வாய்ப்பைப் பெற்றது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரயிலில் சென்ற பெண் சடலம்! ஆக்ரா காவல்துறையிடம் உடலைக் கோரும் சென்னை காவல்துறை

கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு விரைவு ரயிலில் சூட்கேஸில் வைக்கப்பட்ட பெண் சடலம், ஹையதுல்லா நிஷா என்பது அடையாளம் காணப்பட்ட நிலையில், அவரது மிச்ச உடல் பாகங்களை ஆக்ரா காவல்துறையிடம் கோரியிருக்கிறது சென்னை காவல்துறை.

தவெக கூட்டம்: திருமாவளவனுடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!

தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!

தில்லியில் மோசமான வானிலை: விமான சேவைகளில் தாமதம்!

தில்லியில் வானிலை மோசமாக உள்ளதால் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் சனிக்கிழமை (செப். 5) அறிவுறுத்தியுள்ளது.

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,344 ஆக உயர்வு! நோய்கள் பரவும் அபாயம்!

நேபாள பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை (செப். 5) 1,344 ஆக உயர்ந்ததாக நேபாள காவல்துறை அறிவித்துள்ளது.

ஆதார் முகவரி மாற்றம்! விண்ணப்ப நிலை அறிவது எப்படி?

ஆதார் முகவரி மாற்றம் கோரிய விண்ணப்ப நிலை குறித்து அறிவது எப்படி என்பது பற்றி

கைது செய்யப்படும் அனைவரும் குற்றவாளிகள் அல்லர்! நீதியும் நியாயமும் - 3

ஒருவரின் உடற் சுதந்திரத்தை உரிய அதிகாரம் பெற்றவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதைக் கைது (Arrest) என சட்டம் வரையறை செய்கிறது.

வ.உ. சிதம்பரனாரின் வீரம், தேசப்பற்று, தியாகத்தை நினைவுகூர்வோம்: முதல்வர் விஜய்

வ.உ. சிதம்பரனாரின் வீரம், தேசப்பற்று, தியாகத்தை நினைவுகூர்வோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளது குறித்து...

சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பெரும் பணி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து குறித்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments