முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளரா? விந்தையிலும் விந்தை: நயினார் நாகேந்திரன்
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பற்றி....
முதல்வர் விஜய், பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வ உ சிதம்பரனார் பிள்ளை பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது என்று முதல்வர் பேசுவதற்கு இவர் என்ன கையில் அறிவாள், கம்பு உடன் வருகிறாரா?. அப்படி என்ன பேசப்போகிறார் விஜய். ஏற்கெனவே சட்டப்பேரவையில் முதல்வர் எதுவும் பேசுவதில்லை என்றார்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றுள்ளன. அதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும். சிறு குழந்தைகள் பலர் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதுதொடர்பாக முதல்வர் பேசப்போகிறாரா எனக் கேள்வி எழுப்பினார்.
இல்லையெனில் கோவையில் நடந்த படுகொலை போல பல இடங்களில் நடந்துள்ளது. அதுதொடர்பாக பேசப் போகிறாரா. சட்டப்பேரவையில் சினிமா வசனம் பேசுவது உகந்ததல்ல என தெரிவித்தார்.
முதல்வர் விஜய், பிரதமர் வேட்பாளர் என்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் தமிழ்தான் இருக்க வேண்டும் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று பதிலளித்தார்.
தூய்மைப் பணியாளர்களின் அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தீர்வு கிடைக்கும். ஒரு சங்கம் மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.
விவசாயிகளுக்கு இன்னும் முழுமையாக கடன் தள்ளுபடி செய்யவில்லை. மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறந்து வைத்திருக்க வேண்டும். கடந்த வாரம்தான் திறந்து விடப்பட்டிருக்கிறது. முதல்வர் மேட்டூர் சென்றதற்கு மட்டும் ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மின்சார கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.
BJP leader Nainar Nagendran has remarked that projection of Vijay as Chief Minister or Prime Minister candidate is the wonder of wonders.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.