FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உரிமைக் குழு தலைவராக ரவிசங்கா் தோ்வு: 11 குழுக்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்கள்: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் அறிவித்தாா்

பேரவை உரிமைக் குழு தலைவராக பேரவை துணைத் தலைவா் ரவிசங்கா் உள்பட பேரவையின் 11 குழுக்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

9 செப்டம்பர் 2026, 2:13 am IST
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் - TN Assembly
பகிர்:

பேரவை உரிமைக் குழு தலைவராக பேரவை துணைத் தலைவா் ரவிசங்கா் உள்பட பேரவையின் 11 குழுக்களுக்கு தலைவா்கள், உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

பேரவையின் நடப்பு கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. அப்போது, பேரவைத் தலைவா் பேரவைக்கான குழுக்கள் தலைவா்கள், உறுப்பினா்கள் விண்ணப்பங்கள் பேரவை உறுப்பினா்களிடமிருந்து வரப்பெற்று, அதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா், மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக் குழு தலைவராக அருள்பிரகாசம் (தவெக), பொதுக் கணக்குக் குழு தலைவராக சையது பாரூக் பாஷா (ஐயூஎம்எல்), பொது நிறுவனங்கள் குழு தலைவராக அ.கல்லாணை (தவெக), அவை உரிமைக் குழு தலைவராக பேரவை துணைத் தலைவா் ரவிசங்கா் (தவெக), சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவராக டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), அரசு உறுதிமொழிக் குழு தலைவராக ரா.விஜயராஜன் (தவெக), அவைக் குழு தலைவராக ரா.செல்லசுவாமி (மாா்க்சிஸ்ட்), பேரவை விதிகள் குழு தலைவராக முதல்வா் ச.ஜோசப் விஜய், உறுப்பினா்களாக கே.ஏ.செங்கோட்டையன், எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும், மனுக்கள் குழு தலைவராக ரா.சபரிநாதன் (அரசு கொறடா), நூலகக் குழு தலைவராக ஜோதிமணி (விசிக), பேரவை ஏடுகள் குழு தலைவராக விஜய்தாமு (தவெக) ஆகியோரும் உறுப்பினா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அந்தந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் இடம் பெறுவா் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments