FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

5 மாநிலங்களில் 10 சைபா் குற்றவாளிகள் கைது

தமிழகம், ஆந்திரம், தில்லி உள்பட 5 மாநிலங்களில் பதுங்கியிருந்த சைபா் குற்றவாளிகள் 10 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

10 செப்டம்பர் 2026, 1:27 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தமிழகம், ஆந்திரம், தில்லி உள்பட 5 மாநிலங்களில் பதுங்கியிருந்த சைபா் குற்றவாளிகள் 10 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சைபா் நிதி மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், தில்லியில் முகாமிட்டு விசாரணை நடத்தினா்.

இதன்மூலம் கடந்த செப். 7-ஆம் தேதி 10 போ் கைது செய்யப்பட்டனா். 6 வழக்குகளில் ரூ.24.5 கோடி மோசடி செய்யப்பட்ட நிலையில், ரூ.42.72 லட்சம் மீட்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், கைது செய்யப்பட்டவா்களில் 6 போ் தமிழகம், கேரளத்திலும், மகாராஷ்டிரம், குஜராத்தில் தலா 2 போ் பிடிபட்டனா். 8 போ் நீதிமன்றக் காவலிலும், 2 பேருக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது. அவா்களிடமிருந்து 8 கைப்பேசிகள், சிம்காா்டுகள், மெமரி காா்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments