தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைப்பு!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை உசிலம்பட்டியில் வருகின்ற செப். 25 ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’, முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப். 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக தொடக்க விழா தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகின்ற செப். 10 ஆம் தேதி லண்டன் பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல்வர் விஜய், மீண்டும் செப். 16 ஆம் தேதிதான் தமிழகம் திரும்புகிறார்.
இந்த நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் வருகின்ற செப். 25 ஆம் தேதி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கிவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், உசிலம்பட்டியில் பிறந்த 1,500 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Inauguration of the 'Thaimaman Thanga Mothiram' scheme postponed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.