இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்
இந்தியா-இலங்கை துறைமுகங்கள் கூட்டுப் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்களாகத் திகழ முடியும் ராஜ்நாத் சிங் பேசியது குறித்து...
இந்தியா-இலங்கை துறைமுகங்கள் கூட்டுப் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்களாகத் திகழ முடியும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செப். 9) தெரிவித்தார்.
இரு நாடுகளின் எதிர்கால வளத்திற்கு கடல்சார் தொழில்கள் முக்கிய உந்து சக்தியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள்கள் அரசு முறைப் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா-இலங்கை கடல்சார் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
Advertisement
Advertisement
''இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துத் தனக்குத் தெரியும். மீன்பிடித் துறை சார்ந்த சிக்கல்களை பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் தீர்க்க ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன்.
கடல்சார் சட்டம் அமலில் இருந்தாலும், அடிப்படையாக இருக்கும் வாழ்வாதாரப் பிரச்னைகளை கவனத்துடன் கையாள வேண்டும். இந்தியப் பெருங்கடல் இனிவெறும் நீர்வழிப் பாதையாக மட்டும் இல்லை. நமது பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் மூலோபாய எதிர்காலத்திற்கான களமாக மாறும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை பாதுகாப்பதில் மிக நெருங்கிய கூட்டாளிகளாகச் செயல்படச் சாதகமான நிலையில் இந்தியா - இலங்கை உள்ளது'' ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
India-Sri Lanka ports can become engines of shared economic growth Rajnath Singh in Colombo
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.