பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா?
பயணிகள் ஏறும் முன்பே கதவுகளை மூடுவதற்குத்தான்பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா v
பள்ளி மாணவிகள் பேருந்தில் ஏறும்போது கதவுகள் மூடப்பட்டதால் கீழே விழுந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், கோவையில் மற்றொரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
கோவையில், வயதான பெண்கள் ஏறும் போதே அரசுப் பேருந்து கதவுகள் மூடப்பட்டதால் பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனால் ஓட்டுநருடன் பயணியர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கவனக்குறைவாகப் பேருந்தை இயக்கியதாகக் குற்றம்சாட்டிய பயணிகள், தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கோவையில் அரசுப் பேருந்தில் பெண்கள் ஏறிக் கொண்டு இருந்த போதே ஓட்டுநர் கதவை மூடியதால், கதவில் சிக்கிப் பெண்கள் காயம் அடைந்த சம்பவத்தைக் கண்டித்து சக பயணிகள் அரசுப் பேருந்து ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை, திருச்சி சாலை, இருகூர் பிரிவு நிறுத்தத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுவதற்காக வந்து நின்றது. அப்போது, வயதான பெண் பயணிகள் பலர் வரிசையாகப் பேருந்தின் கதவு வழியாக உள்ளே ஏறிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, பயணிகள் அனைவரும் முழுமையாக உள்ளே ஏறி முடிப்பதற்கு முன்பாகவே, எதிர்பாராத விதமாக ஓட்டுநர் திடீரெனப் பேருந்தின் தானியங்கி கதவை மூடியதாகக் கூறப்படுகிறது. இதில், உள்ளே ஏற முயன்ற வயதான பெண் ஒருவர் மூடிய கதவின் நடுவே தனது முகம் மற்றும் மூக்கு சிக்கிக் கொண்டு அலறினர். உடனே பேருந்து நகரத் தொடங்கியதில் அவர்கள் அலறி அடித்துக் கீழே விழந்து படுகாயம் அடைந்தார்.
பெண் பயணி கூச்சல் சப்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகளும், பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்த பொதுமக்களும் உடனடியாக பேருந்தை நிறுத்தச் செய்தனர். அதன்பின்னர், கவனக்குறைவாகப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துநரைச் சூழ்ந்து கொண்ட பயணிகள், வயதான பெண்கள் ஏறி முடிப்பதற்குள் கதவை மூடிப் பேருந்தை எடுப்பதா ? எனக் கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்து நிறுத்தத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் சலசலப்பும் நிலவியது. மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் உள்ள நிலையில், சில அரசுப் பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பெண் பயணிகளை மதிப்பதில்லை என்றும், அவர்கள் ஏறி முடிப்பதற்குள் அவசர அவசரமாகப் பேருந்தை இயக்குவதாகவும் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.