தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிப்பு...
தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மூத்த தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) கடந்த வெள்ளிக்கிழமை (செப். 11) வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மதுரையில் காலமானார்.
அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இத்துடன், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உடலுக்குத் தமிழக அரசின் சார்பில், சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில், இந்திய அரசிடம் இருந்து பத்மஸ்ரீ விருதுபெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல் குமார் இன்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து, பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று பிற்பகல் 11 மணியளவில் மதுரையில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
The Tamil Nadu government has announced that the funeral of Tamil scholar Solomon Pappaiah will be held with full state honors.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.