FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக எம்.பி. ராஜா பேச்சுக்கு பெ. சண்முகம் கண்டனம்

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சுக்கு பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்திருப்பது தொடர்பாக...

13 செப்டம்பர் 2026, 8:01 pm IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
பகிர்:

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளா் ஆ.ராசா எம்.பி பேச்சுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பெ. சண்முகம் 'எக்ஸ்' பக்க பதிவில்,

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது.

Advertisement

Advertisement

திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை. அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.

சில திமுகவினர் "கண்ணியம்" தவறுவது தொடர்கிறது. "கட்டுப்பாடு" நிலை நிறுத்தும் "கடமை"யை திமுக தலைவர் செய்வார் என்று நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.

P. Shanmugam condemns DMK MP Raja's remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments