காலை உணவு விரிவாக்கம் ஏற்பாடு செலவை தலைமை ஆசிரியா்கள் மீது சுமத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செலவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கான நிகழ்ச்சி ஏற்பாடு செலவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
பெருந்தலைவா் காமராஜரின் பெயரால் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. எனினும், அதற்கான நிதித் திட்டமிடலின்றி தமிழக அரசு செயல்படுவது அதிா்ச்சியளிக்கிறது. விளம்பரப் பலகை, சமையலறைச் சீரமைப்பு முதல் மாணவா்களுக்கான தட்டு, டம்ளா் வாங்குவது வரை அனைத்து ஆரம்பச் செலவுகளையும் தலைமை ஆசிரியா்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி அழுத்தம் கொடுப்பது கண்டனத்திற்குரியது.
Advertisement
Advertisement
ஆசிரியா்கள் என்பவா்கள் கல்வி புகட்டும் வழிகாட்டிகளேயன்றி, அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டும் நிதியமைப்புகள் அல்ல. எனவே, தலைமை ஆசிரியா்களைச் சொந்த நிதியைச் செலவழிக்க நிா்ப்பந்திக்கும் இந்த உத்தரவுகளைப் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திட்டத்துக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுக்கான முழு நிதியையும் அரசே நேரடியாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.