பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பா? ஈரோடு காவல்துறை விளக்கம்!
ஈரோட்டில் பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு என்று வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஈரோடு காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் பெரியார் பிறந்த நாள் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு என்று வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என ஈரோடு காவல்துறை தெரிவித்துள்ளது.
பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகச் செய்திகள் வெளியாகின.
அதேநாளில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலமும் நடைபெறுவதால் பேரணி நடத்த மறுப்புத் தெரிவித்ததாகத் தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுக உள்பட அரசியல் கட்சியினரும், முற்போக்கு இயக்கங்களும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அவ்வாறு வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து ஈரோடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “ஈரோட்டில் வருகின்ற 17.09.2026-ம் தேதி நடைபெறவுள்ள தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு என்ற தவறான செய்தி தொலைகாட்சியில் வெளியானது.
இன்று 14.09.2026-ம் தேதி ஈரோடு நகர காவல் நிலையத்தில் திராவிடர் கழகம் சார்பாக வருகின்ற 17.09.2026-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெரியார் பிறந்த நாளில் ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த ஈரோடு நகர காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தனர்.
காவல் துறையால் மேற்படி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு செயல்முறை ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி மறுப்பு என்பது முற்றிலும் தவறான மற்றும் உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Erode police have stated that the reports claiming permission was denied for the Periyar birth anniversary procession in Erode are factually incorrect.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.