FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

25 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஏலேல சிங்க விநாயகர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.

14 செப்டம்பர் 2026, 2:43 pm IST
விநாயகா் சதுர்த்தியையொட்டி ரூ. 25 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஏலேல சிங்க விநாயகர்.
பகிர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று(செப். 14) காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆண்டுதோறும் வரும் விநாயகர் சதுர்த்தி நாளன்று காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர் கோயிலில் உள்ள மூலவருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆலயத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் ரூ. 25 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10, ரூ, 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500 ஆகிய புதிய ரூபாய் நோட்டுகளால் சந்நிதி மற்றும் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு ஏலேல சிங்க விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து, ஏராளமான பக்தர்கள் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்து அருள்பாலித்த விநாயகரை பயபக்தியுடன் வேண்டி, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

மேலும், வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

summary

On the occasion of Vinayagar Chaturthi today (Sept. 14), the Elela Singa Vinayagar deity, located on Sannidhi Street near the Kanchi Kamakshi Amman Temple in Kanchipuram, was adorned with currency notes worth rs. 25 lakh and blessed the devotees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments