லண்டன் பயணம்! விடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
லண்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டிற்கு சென்றிருந்த போது, எடுக்கப்பட்ட விடியோவை முதல்வர் விஜய் பகிருந்துள்ளது குறித்து...
லண்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேஸிங் சர்க்யூட்டிற்கு சென்றிருந்த போது, எடுக்கப்பட்ட விடியோவை முதல்வர் விஜய் திங்கள்கிழமை (செப். 14) வெளியிட்டுள்ளார்.
தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் விஜய் வியாழக்கிழமை (செப்.10) இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்ற லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதனை கண்டு ரசித்தார்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் சில நாள்களுக்கு முன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’ திடலை முதல்வர் விஜய் பார்வையிடத் திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது குறித்து தொழிலதிபர்களுடன் இன்று முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதன்மூலம், ரூ. 11,000 கோடிகளுக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கப்பட்டதோடு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
இந்த நிலையில், சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட் திடலில் நுழைந்தது முதல், கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தது, அஜித்துடன் காரில் சென்றது, ரேஸிங் உடையில் மக்களை சந்தித்தது போன்ற நிகழ்வுகள் அடங்கிய விடியோவை முதல்வர் விஜய் பகிர்ந்துள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Chief Minister Vijay released a video on Monday (Sept. 14) that was filmed during his visit to London's renowned Silverstone racing circuit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.