FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமைச்சர் பதவி கிடைத்ததால்... திருமாவளவன் பேச்சு குறித்து பிரேமலதா கேள்வி

அமைச்சர் பதவி கிடைத்ததால் நிலைப்பாட்டில் மாற்றமா என திருமாவளவனுக்கு பிரேமலதா கேள்வி எழுப்பினார்.

16 செப்டம்பர் 2026, 4:09 pm IST
பிரமேலதா | திருமாவளவன் - சித்திரிப்பு
பகிர்:

தமிழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால் நிலைப்பாடு மாறியதா? இது காழ்ப்புணர்ச்சியா அல்லது தேமுதிக மீதான பயமா?” என தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா கேள்வி எழுப்பினார்.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் தேமுதிக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த். இதில் 60-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

விவசாயக் கடன் தள்ளுபடி, சட்டம்-ஒழுங்கு, விஜயகாந்துக்கு பாரத ரத்னா உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, விவசாயிகளின் நெல் கொள்முதல், மின்வெட்டு, குடிநீர் மற்றும் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக, “மக்கள் ஏற்றுக்கொள்ளும் திட்டமாக இருக்க வேண்டும். ஓமந்தூரார் வளாகத்தையே மீண்டும் பயன்படுத்தலாம்” என தெரிவித்தார்.

திருமாவளவன் தேமுதிக குறித்து தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், “அன்று விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட திருமாவளவன், இன்று தேமுதிகவை விமர்சிப்பது ஏன்? அமைச்சர் பதவி கிடைத்ததால் நிலைப்பாடு மாறியதா? இது காழ்ப்புணர்ச்சியா அல்லது தேமுதிக மீதான பயமா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் கண்டிக்கத்தக்கது என்றும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments