மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதற்கு ஆதாரங்கள் உள்ளன! திருச்சி சிவா
அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக சென்னை டிஜிபி அலுவலகத்தில் திருச்சி சிவா புகார்...
முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வாலை காவல்துறை தலைமை அலுவலகத்தில் சந்தித்து புகார் அளித்தார். மிசா தொடர்பாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு எதிராக அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய திருச்சி சிவா,
Advertisement
Advertisement
"காங்கிரஸ் கூட்டணியில் இருந்த காலத்திலும் அவசர நிலை குறித்து திமுக கேள்வி எழுப்பியது.
அவசர நிலை காலம் என்பது ஜனநாயகத்திற்காக நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாகும். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.
அவர் மிசாவில் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார்.
அரசியல் பதவியில் இருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக் கூடாது.
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். கட்சித் தலைவரை அவமதிக்கும் வகையில் பேசுவது கட்சி நிர்வாகிகளிடையே வேதனையை ஏற்படுத்துகிறது.
நான் நாடாளுமன்றத்தில் பேசும்போதும் பொறுப்புணர்வுடன் பேசுகிறேன். மேலே இருப்பவர்கள் கீழே வருவதும், கீழே இருப்பவர்கள் மேலே செல்வதும் ஜனநாயகத்தின் இயல்பு.
மேலும், மக்களின் பிரச்சினைகளில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மட்டுமே வழக்குகள் பாய்கிறது" என்று அவர் குற்றம்சாட்டினார்.
There is evidence that M.K. Stalin was arrested under MISA: Trichy Siva
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.