FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஸ்ரீ ரங்கத்திலிருந்து திருவெறும்பூருக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்!

ஸ்ரீரங்கம் - திருவெறும்பூர் வரை புதிய அரசு பேருந்து சேவை தொடங்கியதைப் பற்றி..

19 செப்டம்பர் 2026, 12:48 pm IST
புதிய அரசு பேருந்து சேவை - video crop
பகிர்:

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலிருந்து பால்பண்ணை வழியாக திருவெறும்பூருக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை மனு அளித்திருந்தார். இதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் -

திருவெறும்பூர் இடையே நேரடி பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் எம்பி துரை வைகோ கலந்துகொண்டு, புதிய பேருந்து சேவையைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார். புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து அதே பேருந்தில் பயணம் மேற்கொண்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், தினசரி அலுவலகம் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments