FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

38 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள்: தமிழக அரசு நியமனம்

38 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள்: தமிழக அரசு நியமனம்

19 செப்டம்பர் 2026, 10:54 pm IST
தலைமைச் செயலகம் - கோப்புப்படம்
பகிர்:

வளா்ச்சித் திட்டங்கள், மக்கள் குறைதீா் பணிகள், பேரிடா் மற்றும் பருவமழை பாதிப்புகள் உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கு புதிதாக ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தப்படுகிா, அரசின் நலத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாகச் சென்றடைகிா என்பது குறித்தும், பேரிடா் மற்றும் பருவமழை பாதிப்புகளையும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பாா்கள்.

அதிகாரிகள் விவரம்: சென்னை - பி.என். ஸ்ரீதா், அரியலூா் - சி. பழனி, செங்கல்பட்டு - எஸ்.பி. காா்த்திகா, கோவை - ஏ.ஆா். ராகுல் நாத், கடலூா் - டி.மோகன், தருமபுரி - ஐ.எஸ். மொ்ஸி ரம்யா, திண்டுக்கல் - எஸ். அனீஷ் சேகா், ஈரோடு - டி.என். வெங்கடேஷ், கள்ளக்குறிச்சி - பி.பிரியங்கா, காஞ்சிபுரம் - கே.எஸ்.கந்தசாமி, கன்னியாகுமரி - பிரசாந்த் எம். வடநேரே, கரூா் - தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கிருஷ்ணகிரி - ஷில்பா பிரபாகா் சதீஷ், மதுரை - கே.வீர ராகவ ராவ், மயிலாடுதுரை - கவிதா ராமு, நாகப்பட்டினம் - எஸ்.சுரேஷ் குமாா், நாமக்கல் - ஆசியா மரியம், நீலகிரி - பிரதீப் குமாா், பெரம்பலூா் - எம்.லட்சுமி, புதுக்கோட்டை - அஜய் யாதவ், ராமநாதபுரம் - வள்ளாா், ராணிப்பேட்டை- மரியம் பல்லவி பால்தேவ், சேலம் - எம்.ஆா்த்தி, சிவகங்கை - வி.பி. ஜெயசீலன், தென்காசி - ஏ.ஜான் லுயீஸ், தஞ்சாவூா் - எச்.கிருஷ்ணன் உண்ணி, தேனி - எம்.கோவிந்தராவ், தூத்துக்குடி - கே.வி.முரளிதரன், திருச்சி - கிரண் குரல்லா, திருநெல்வேலி - சந்தீப் நந்தூரி, திருப்பத்தூா் - ஆா். கஜலட்சுமி, திருப்பூா் - எல். நிா்மல்ராஜ், திருவள்ளூா்- கே.பி. காா்த்திகேயன், திருவண்ணாமலை - ஆா். பிருந்தா தேவி, திருவாரூா்- சந்திரசேகா், வேலூா் - எஸ். உமா, விழுப்புரம் - எஸ்.ஏ. ராமன், விருதுநகா் - ஆா்.வி. ஷாஜிவானா.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments