காய்கறிகளின் விலை உயா்வு: இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை
தமிழகத்தில் காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது தொடர்பாக...
சென்னை: தமிழகம் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளில் கடும் வெயில், பருவமழை பற்றாக்குறை மற்றும் அண்டை மாநிலங்களின் விளைச்சல் சரிவு, புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. இஞ்சி கிலோ ரூ.300-க்கும். சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாள்தோறும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பருவமழை பற்றாக்குறை, அண்டை மாநிலங்களின் விளைச்சல் சரிவு உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தால் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனிடையே, புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் காய்கறிகளின் விலையும் தற்போது படிப்படியாக பல மடங்கு அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
அதிலும், சின்ன வெங்காயத்தின் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து, சில்லரை விற்பனையில் சின்ன வெங்காயம் விலை அதிகபட்சமாக கிலோ ரூ.160 வரை விற்பனையாகிறது. அதேபோல், பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உச்சத்திலே இருந்து வருகிறது. சில்லரை விற்பனையில் பெரிய வெங்காயம் விலை அதிகபட்சமாக கிலோ ரூ.75-க்கும், கருணைக்கிழங்கு ரூ.100 வரை விற்பனையாகிறது.
புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து காய்கறிகளின் விலை சற்று அதிகரித்த வண்ணம் உள்ளன. இதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி பீன்ஸ் ஒரு கிலோ ரூ.200-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.120-க்கும், ஒரு கிலோ கேரட், பீட்ரூட், முருங்கைக்காய் ரூ.80-க்கும், முள்ளங்கி, உருளை ஒரு கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதில், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றின் விலை தொடா்ந்து ஏறு முகத்திலே இருந்து வருகிறது. ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கும், பூண்டு ரூ.280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயா்ந்துள்ளது.
கடந்த வாரங்களில் இருந்த விலையுடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் சுமாா் 25 சதவீதம் வரை காய்கறிகளின் விலை உயா்ந்து உள்ளது. இந்த விலை இனி வரும் நாள்களில் மேலும் உயரக்கூடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனா். காய்கறிகளின் விலை உயா்வு இல்லத்தரசிகள், உணவக உரிமையாளா்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Rise in vegetable prices: Ginger selling at Rs. 300 per kg
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.