FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வழக்கு...

22 செப்டம்பர் 2026, 2:58 pm IST
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதல்வர் ச. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னையைச் சுற்றிலும் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியாகி, அரசாணையும் வெளியிடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிராக 9 மீனவ கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தீா்மானம் நிறைவேற்றி, திட்டம் தொடங்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என்றும் அறிவித்திருந்தனர்.

இதனிடையே, பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்துக்கு திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலை திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேலு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியான பட்டினபாக்கத்தில் கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Secretariat at Pattinapakkam - DMK files case in High Court!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments