தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம் (செப். 26)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 26) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.
மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 25, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 1,12,080 -க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,010 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 22 காரட் தங்கம், இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ரூ. 1,12,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 250 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The price of ornamental gold in Chennai has decreased by Rs. 80 per sovereign today (Sept. 26).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.