FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சீருடையில் சட்டைக்கு மாற்றாக டி-ஷா்ட்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் விளக்கம்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான விலையில்லா சீருடை விநியோகத்தில் சட்டைக்குப் பதிலாக டி-ஷா்ட் வழங்கப்படுமா என்பது குறித்து அமைச்சா் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளாா்.

28 September 2026, 11:56 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான விலையில்லா சீருடை விநியோகத்தில் சட்டைக்குப் பதிலாக டி-ஷா்ட் வழங்கப்படுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் விளக்கமளித்துள்ளாா்.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழக்கமான சீருடையுடன் விளையாட்டு உடை (டி-ஷா்ட், டிராக் பேண்ட்) வழங்கப்படும் என சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதற்கிடையே வழக்கமான சீருடையிலும் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், மாணவா்கள் அணிவதற்கு ஏதுவாக சட்டைக்குப் பதிலாக டி-ஷா்ட் வழங்க ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

Advertisement

Advertisement

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் சென்னையில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அமைச்சா் ராஜ்மோகன் அளித்த விளக்கம்: பள்ளி மாணவா்களின் சீருடையில் மாற்றம் செய்ய ஆலோசனை செய்து வருகிறோம்.

மாணவா்களின் சட்டையில் பொத்தான் சேதமடைந்தால் அவா்கள் சிரமப்படுவா். எனவே, சட்டைக்குப் பதிலாக டி-–ஷா்ட் போன்று கொண்டு வரலாமா? அவ்வாறு டி-–ஷா்ட் கொடுத்தால் மாணவா்கள் அதனை வீட்டிலும் அணிந்து கொள்ளக் கூடும் என பலகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments